சிங்கம்புணரி பகுதியில், விளைந்த நெல்மணிகளை பறவைகளிடம் இருந்து காப்பாற்ற புதிய யுக்தி; காற்றில் அசையும் தார்ப்பாய் குடில்கள் அமைப்பு


நெல்மணிகளை பறவைகளிடம் இருந்து காப்பாற்றும் வகையில் குடில் அமைத்து காவல் காத்து வருவதை படத்தில் காணலாம்.
x
நெல்மணிகளை பறவைகளிடம் இருந்து காப்பாற்றும் வகையில் குடில் அமைத்து காவல் காத்து வருவதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 16 Dec 2020 3:20 AM IST (Updated: 16 Dec 2020 3:20 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் விளைந்த நெல்மணிகளை பறவைகளிடம் இருந்து காப்பாற்ற புதிய யுக்தியை விவசாயிகள் கையாண்டு வருகிறார்கள். அதன்படி வயல்ெவளிகளில் காற்றில் அசையும் தார்ப்பாய் குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

விவசாயிகள்
சிங்கம்புணரி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பிரான்மலை ஆகிய பகுதிகள் இயற்கை சூழ்ந்த இடமாக இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவமழையானது நன்றாக பெய்து இங்குள்ள கண்மாய்கள் நிரம்பினால் விவசாயம் நன்றாக செழிக்கும். இதுபோக இந்த பகுதியில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர்.

மேலும் சிங்கம்புணரியை அடுத்த வேங்கைப்பட்டி, அணைக்கரைப்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட பகுதியில் நெல் பயிர் மட்டுமில்லாமல் கடலை, அவரை, கீரை வகைகள், உளுந்து உள்ளிட்ட பயிர்களும் பயிரிட்டு வருகின்றனர்.

அறுவடைக்கு தயாராகும் நெல்மணிகள்
இந்த ஆண்டு ஏற்கனவே முன்கூட்டியே பருவ மழை பெய்ய தொடங்கியதால் இங்குள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது தொடர்ந்து அடுத்தடுத்து வந்த நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

இந்த மழையினால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. சில கண்மாய்கள் நிரம்பி மறுகால் போனது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து இருந்தனர்.. தற்போது பெய்த மழையால் இந்த நெற்பயிர்கள் கதிர் விட்ட நிலையில் அறுவடைக்கு தயாராகி வருகிறது..

பறவைகளிடம் இருந்து காப்பாற்ற...
இதையடுத்து இந்த நெற்பயிர்களை தேடி மயில், குருவி உள்ளிட்ட பல்வேறு பறவைகளும், ஆடு, மாடு, காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளும் அடிக்கடி வரத்தொடங்கி உள்ளன. பறவைகள் தற்போது விளைந்த நெல்மணிகளை சாப்பிட்டு வீணாக்கிறது. இதையடுத்து இந்த பறவைகள், விலங்குகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் புதிய யுக்தியை கையாண்டு வருகிறார்கள்.

இதற்காக விளைந்த நெல் பயிர் உள்ள வயல்வெளிகளில் ஆங்காங்கே தென்னங்கீற்று கொண்டு குடில்கள் அமைத்து இரவு, பகலாக காவல்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் பறவைகள், குருவிகளிடம் இருந்து நெல் பயிர்களை காப்பாற்ற சில்வர் தட்டில் தாளம் போட்டபடியே வயல்வெளி வரப்புகளில் சத்தம் போட்டப்படி செல்கின்றனர். இன்னும் சில விவசாயிகள் கையில் துணியை வைத்து கொண்டு சத்தம் எழுப்பி பறவைகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்றுகின்றனர். அது மட்டுமின்றி தார்ப்பாய், சாக்குப்பை கொண்டு நெற்பயிர் அருகே குடில் அமைத்து உள்ளனர். இது விவசாயி இல்லாத ேநரத்தில் காற்றில் அசைவதால் சத்தம் கேட்டு ெநற்பயிருக்கு பறவைகள் வருவது தடுக்கப்படுகிறது.

தீப்பந்தம் ஏற்றி...
இதுதவிர இரவு நேரங்களில் மயில்கள் மற்றும் காட்டு விலங்குகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற தீப்பந்தத்தை ஏற்றி வயல்வெளிகளை சுற்றி வருகின்றனர். அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக குடில்களில் அவர்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்து வருகின்றனர்.

Next Story