கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் 40 இருளர் குடும்பத்தினருக்கு தனிநபர் கழிவறை
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் 40 இருளர் குடும்பத்தினருக்கு தனிநபர் கழிவறை அமைக்க முடிவு செய்தது.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையம் அணுவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் மற்றும் சுற்றுப்புற மாநிலங்களுக்கும் வினியோகம் செய்து வருகிறது. அத்துடன் தமது சமூக நல பொறுப்பு குழுவின் மூலம் கல்பாக்கத்தை சுற்றியுள்ள சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், புதுப்பட்டினம், வாயலூர் உள்பட்ட கிராமங்களுக்கு குடிநீர், சாலை வசதி, பள்ளி கட்டிடங்கள், பெண்கள், மீனவர்களுக்கு பொருளாதார முன்னேற்ற திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட அன்னை சத்யாநகரில் வசிக்கும் 40 இருளர் குடும்பங்களுக்கு அணு மின் நிலையம் தனி நபர் கழிவறை அமைக்க முடிவு செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றுமுன்தினம் அணு சக்தி துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள விருந்தினர் மாளிகையில் கையொப்பம் ஆனது.
நிலைய இயக்குனர் எம்.சீனிவாஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நிறுவன சமூக பொறுப்பு குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அணுசக்தி துறை தலைமை மருத்துவர் அண்ணல், துணை பொது மேலாளர் (மனித வளம்) மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூ.10½ லட்சம் மதிப்பீட்டில் 40 இருளர் குடும்பங்களுக்கு தனி நபர் கழிவறை அமைக்க தனியார் தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
Related Tags :
Next Story