மன்னார்குடி அருகே ரூ.1¾ கோடியில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி - அமைச்சர் காமராஜ் ஆய்வு


மன்னார்குடி அருகே ரூ.1¾ கோடியில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி - அமைச்சர் காமராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 16 Nov 2020 4:51 AM (Updated: 16 Nov 2020 4:51 AM)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே ரூ.1¾ கோடியில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டும் பணியை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மன்னார்குடி, 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் ரூ.1 கோடியே 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணி மற்றும் ரூ.2 கோடியே 69 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அரசு மேல் பள்ளி கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, தாசில்தார் தெய்வநாயகி, ஒன்றியக்குழு தலைவர் டி.மனோகரன், மன்னார்குடி ஒன்றிய குழு முன்னாள் துணை தலைவர் தமிழ்ச்செல்வம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்று காலத்தில் மக்கள் நலப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நெருக்கடியான கால கட்டத்திலும் தமிழகத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்ற மாநிலங்களை காட்டிலும் கூடுதலாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று பிற மாநிலங்களில் இரண்டு, மூன்று மடங்காக பெருகி வரும் நிலையில் தமிழகத்தில் தற்போது 2 ஆயிரம் என்ற அளவில் குறைந்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் ஆலோசித்து எடுத்துவரும் துரித நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. வட கிழக்கு பருவ மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாரதீய ஜனதா கட்சியினர் அவர்கள் கட்சி குறித்து உயர்வாக பேசுவதை அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வதாக எடுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story