15-ந் தேதிக்குள் மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிக்க தீவிர பரிசீலனை ஆதித்ய தாக்கரே தகவல்
மின்சார ரெயில்களில் பொதுமக்களை வருகிற 15-ந் தேதிக்குள் அனுமதிப்பது குறித்து தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
மும்பை பெருநகரின் உயிர்நாடியாக விளங்கும் மின்சார ரெயில் சேவை கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. பின்னர் அத்தியாவசிய பணியாளர்களுக்காக மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மருந்து நிறுவன ஊழியர்கள் போன்ற அத்தியாவசிய பணியாளர்கள் பயணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மின்சார ரெயில்களில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வக்கீல்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தீபன்கர் தத்தா தலைமையிலான அமர்வு, மின்சார ரெயில்களில் பொதுமக்களையும் அனுமதிக்க தேவையான வழிமுறையை கண்டறியுங்கள் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையே மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகியோர் முடிவு எடுப்பார்கள் என்று சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியிருந்தார். இந்தநிலையில் சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் ஆதித்ய தாக்கரே கூறியிருப்பதாவது:-
15-ந் தேதிக்குள்...
மின்சார ரெயில்களில் அனைவரையும் அனுமதிக்க தேவையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டு, பின்னர் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். பொதுமக்களை வருகிற 15ந் தேதிக்குள் அனுமதிப்பது தொடர்பாக அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. ரெயில் சேவைகளை அதிகரிப்பது குறித்தும் ரெயில்வேயுடன் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மந்திரி ஆதித்ய தாக்கரே வெளியிட்டு உள்ள தகவல் காரணமாக வேலைக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அனைவருக்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டால் தான் மும்பை பெருநகரில் மக்கள் தங்களது இயல்பான பணியை தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story