சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா: மயிலாடுதுறை போலீஸ் நிலையம் மூடப்பட்டது


சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா: மயிலாடுதுறை போலீஸ் நிலையம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 11 Aug 2020 3:45 AM IST (Updated: 11 Aug 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

குத்தாலம், 

மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 6 போலீசாரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

போலீசாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் நிலையம் நேற்று மூடப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து போலீசார் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story