நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க வாழை இலை குளியல்
அரியலூர் மாவட்டத்தில் வாழை இலை குளியல் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்தில் வாழை இலை குளியல் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எளிதாக கிடைக்கக்கூடிய வாழை இலையை கொண்டு எவ்வாறு சிகிச்சை எடுத்துக்கொள்வது என களத்தில் நேரடியாக பொதுமக்கள் முன்னிலையில் செய்து காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவர்கள் பழனி, ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இயற்கை மருத்துவர் தங்க சண்முகசுந்தரம் கலந்து கொண்டு, தனக்கு தானே வாழை இலை குளியல் சிகிச்சை எடுத்துக்கொண்டு அது குறித்து பொதுமக்களிடையே விளக்கம் அளித்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
Related Tags :
Next Story