திருப்பூர் சந்தைக்கு 70 டன் மீன்கள் வரத்து ஒரு கிலோ வாவல் ரூ.800-க்கு விற்பனை


திருப்பூர் சந்தைக்கு 70 டன் மீன்கள் வரத்து  ஒரு கிலோ வாவல் ரூ.800-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 May 2020 4:30 AM IST (Updated: 25 May 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் சந்தைக்கு 70 டன் மீன்கள் விற்பனைக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. இதில் ஒரு கிலோ வாவல் மீன் ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மார்க்கெட்டுகளுக்கு பொதுமக்கள் சென்று தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்கிறார்கள். இந்த மார்க்கெட்டுகளில் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

பொதுமக்களின் வசதிக்காக காய்கறி, மீன் சந்தை தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், திருப்பூருக்கு 70 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

விற்பனை மும்முரம்

அதன்படி கேரளாவில் இருந்து 15 டன், தமிழ்நாட்டில் இருந்து 25 டன், ஆந்திராவில் இருந்து 30 டன் என மொத்தம் 70 டன் மீன்கள் நேற்று முன்தினம் இரவு திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டன. அப்போது இருந்தே மீன்கள் விற்பனை நடைபெற தொடங்கியது. இதில் கடல் மீன்களான மத்தி மீன் ஒரு கிலோ ரூ.200-க்கும், அயிலை ரூ.300-க்கும், ஊளி ரூ.200-க்கும், கெளுத்தி ரூ.150-க்கும், வாவல் ரூ.800-க்கும், நண்டு ரூ.400-க்கும் விற்கப்பட்டது.

அணை மீன்களான கட்லா ஒரு கிலோ ரூ.180-க்கும், ரோகு ரூ.180-க்கும், மிருகால் ரூ.160-க்கும், நெய்மீன் ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்த மீன் விற்பனை நடைபெற்றது.

இதில் திருப்பூர், உடுமலை, வால்பாறை, கரூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் மீன்களை வாங்கிச்சென்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், 70 டன் மீன்களும் விற்று தீர்ந்தன.

Next Story