திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 6 March 2020 4:19 AM IST (Updated: 6 March 2020 4:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்போரூர்,

திருப்போரூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கணபதி ஹோமம், ஆறாம் கால பூஜை, அபிஷேக ஆராதனை போன்றவை நடைபெற்றது..

கிளி வாகனம், பூத வாகனம், வெள்ளி அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், தங்கமயில் வாகனம் பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகம் போன்றவற்றில் எழுந்தருளி முருகப்பெருமான் நான்கு மாடவீதிகளில் வீதி உலா வந்தார்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளி தெய்வனையுடன் தேரில் பவனி வந்தார். பகல் 1.30 மணியளவில் தேர் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில் திருப்போரூர் எம்.எல்.ஏ. செந்தில் இதயவர்மன், மற்றும் சிவச்சாரியார்கள், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுகாதாரப்பணிகளை திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

வரும் 8-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியும், தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. 10-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சீிபுரம் தக்கார்/உதவிஆணையர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர் சக்திவேல் கோவில், மேலாளர் வெற்றிவேல் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story