பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு


பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம்.
x
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 5 March 2020 10:35 AM IST (Updated: 5 March 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

பூண்டி ஏரியில் இருந்து...
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் வரத்தைப் பொறுத்து பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப் படுவது வழக்கம்.

அதன்படி டிசம்பர் 12-ந்தேதி பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. அன்று முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.

மீண்டும் தண்ணீர் திறப்பு
இந்த நிலையில், நேற்று முதல் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 28.78 அடியாக பதிவானது. 1473 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 353 கனஅடி தண்ணீரும், புழல் ஏரிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 154 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Next Story