நெல்லையில் கொக்கிரகுளம் புதிய பாலம் திறப்பு விழா காண்பது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நெல்லையில் கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலம் திறப்பு விழா காண்பது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நெல்லை,
நெல்லையில் கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலம் திறப்பு விழா காண்பது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
புதிய ஆற்றுப்பாலம்
நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆங்காங்கே பாலங்கள், மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு ஒவ்வொன்றாக கட்டப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பையும், கொக்கிரகுளத்தையும் இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுலோச்சன முதலியார் பாலத்தின் அருகே கூடுதலாக ஒரு பாலம் கட்டுவதற்கு ரூ.16½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த 2018–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. ஆற்றுக்குள் 10 தூண்கள் நிறுவப்பட்டு நடைபாதை வசதியுடன் கூடிய 14.8 மீட்டர் அகலம், 235 மீட்டர் நீளத்துடன் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இத்துடன் அருகில் உள்ள பலாப்பழ ஓடையிலும் புதிய பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
திறப்பு விழா எப்போது?
பாலத்தை ரோட்டுடன் இணைக்கும் வகையில் இணைப்பு ரோடுகளும் போட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மீது சோதனை ஓட்ட அடிப்படையில் ஒரு சில நாட்கள் பஸ், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு பாலத்தின் தொடக்கத்தில் இரும்பு தடுப்புகளை வைத்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
பாலம் கட்டி முடித்து தயார் நிலையில் இருப்பதால் எப்போது திறக்கப்படும்? என்பது பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். பாலத்தில் மின்விளக்குகள் வசதி செய்யப்படாததால் பாலம் இன்னும் முழுமை பெறவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று பாலத்தின் இரும்பு கம்பங்களை நிறுத்துவதற்கான பணி தொடங்கப்பட்டது. மின் விளக்குகள் பொருத்தி முடித்த உடன், இந்த பாலத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஒரு வழிப்பாதையாக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story