மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 2 அடுக்கு மோட்டார் சைக்கிள் நிறுத்தம்
மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 2 அடுக்கு மோட்டார் சைக்கிள் நிறுத்தம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை,
மெட்ரோ ரெயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதில் ஒரு அங்கமாக மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடத்தில், 2 அடுக்கில் மோட்டார் சைக்கிள் நிறுத்த நவீன வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் எல்.நரசிம் பிரசாத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தரைதளத்தில் 5 மோட்டார் சைக்கிள்களும், 9 அடி உயரத்தில் 5 மோட்டார் சைக்கிள்களும் நிறுத்த முடியும். இந்த 2 அடுக்கு வாகன நிறுத்தத்தில் ‘ஹைட்ராலிக்’ முறையில் மோட்டார் சைக்கிள்கள் மேலே கொண்டு செல்லப்படுகின்றன. புவிஈர்ப்பு விசையின் மூலம் மீண்டும் கீழே இறக்கப்படுகின்றன. இந்த வசதியை மேலும் பல மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்துமிடங் களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் அனைத்தும் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story