பாந்திரா, ரே ரோடு ரெயில் நிலையங்களில் சம்பவம் ஓசிப்பயணம் செய்த பயணிகள் தள்ளி விட்டதில் 2 டிக்கெட் பரிசோதகர்கள் காயம்


பாந்திரா, ரே ரோடு ரெயில் நிலையங்களில் சம்பவம் ஓசிப்பயணம் செய்த பயணிகள் தள்ளி விட்டதில் 2 டிக்கெட் பரிசோதகர்கள் காயம்
x
தினத்தந்தி 26 Dec 2019 4:45 AM IST (Updated: 26 Dec 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

பாந்திரா, ரே ரோடு ரெயில் நிலையங்களில் ஓசிப்பயணம் செய்த பயணிகள் தள்ளி விட்டதில் 2 டிக்கெட் பரிசோதகர்கள் காயமடைந்தனர்.

மும்பை, 

பாந்திரா, ரே ரோடு ரெயில் நிலையங்களில் ஓசிப்பயணம் செய்த பயணிகள் தள்ளி விட்டதில் 2 டிக்கெட் பரிசோதகர்கள் காயமடைந்தனர்.

பாந்திராவில்...

மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் நம்பர் 4-ல் நேற்று முன்தினம் டிக்கெட் பரிசோதகர் விவேக் ராய் என்பவர் பணியில் இருந்தார். அப்போது ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளிடம் அவர் டிக்கெட் பரிசோதனை நடத்தினார். இதில் ஒரு பயணி டிக்கெட் இன்றி ஓசிப்பயணம் செய்தது தெரியவந்தது.

இதனால் அந்த பயணியை பிடித்து பிளாட்பாரம் நம்பர் 1-ல் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பயணி டிக்கெட் பரிசோதகரை பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பி சென்றார். இதில் தலையில் காயமடைந்த அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல, ரே ரோடு ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் ஹரேராம் சர்மா, பயணிகளிடம் டிக்கெட்டை காண்பிக்கும்படி கூறினார். அப்போது ஒரு கும்பல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் டிக்கெட் பரிசோதகரை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் கையில் காயமடைந்த ஹரேராம் சர்மாவை பைகுல்லா ஆஸ்பத்திரியில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற ஓசிப்பயணம் செய்த பயணிகளை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story