மூலைக்கரைப்பட்டி அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் சாவு
மூலைக்கரைப்பட்டி அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இட்டமொழி,
மூலைக்கரைப்பட்டி அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர்
தூத்துக்குடி அந்தோணியார்புரம் மூன்று சந்து தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). அவருடைய மகன் முத்து பிரகாஷ் (19). 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்கொண்டு படிக்கவில்லை. எனவே முத்து பிரகாஷ் தனது தாய் மாமன் வீடான நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே பதைக்கம் கிராமத்தில் உள்ள சின்னராஜா (35) என்பவருடைய வீட்டில் தங்கி இருந்து வந்தார்.
நேற்று முத்து பிரகாஷ் தனது நண்பர்களுடன் அங்குள்ள தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு வெள்ளநீர் கால்வாய் திட்டத்துக்காக வெட்டப்பட்டுள்ள கால்வாயில் தேங்கியுள்ள மழைநீரில் குளிக்க சென்றுள்ளார்.
தண்ணீரில் மூழ்கி சாவு
அங்கு ஒரு புறம் இருந்து மறுபுறத்துக்கு நீந்திய முத்து பிரகாஷ் திடீரென தண்ணீரில் மூழ்கி அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து, தண்ணீரில் மூழ்கிய முத்து பிரகாசை மீட்டு அருகில் உள்ள முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே முத்து பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story