நெல்லை மாவட்டத்தில், நாளை மறுநாள் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு


நெல்லை மாவட்டத்தில், நாளை மறுநாள் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2019 3:30 AM IST (Updated: 25 Dec 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அம்மா திட்ட முகாம்

பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பயணம் செய்து நீண்ட தூரம் காத்திருந்து மனுக்களை அளிப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை போக்குகின்ற வகையில், மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய்த்துறை அலுவலர்கள் சென்று குறைகளை கேட்டறியும் வகையில் அம்மா திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நெல்லை தாலுகா கருவநல்லூர் கிராமம், ராதாபுரம் தாலுகா பணகுடி பகுதி-2, அம்பை தாலுகா பிரம்மதேசம், நாங்குநேரி தாலுகா நாங்குநேரி, சேரன்மாதேவி தாலுகா வடக்கு அரியநாயகிபுரம் பகுதி-2, பாளையங்கோட்டை தாலுகா கீழத்திருவேங்கடநாதபுரம், மானூர் தாலுகா பல்லிக்கோட்டை, திசையன்விளை தாலுகா விஜயநாராயணம் பகுதி-4 ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

பொதுமக்கள் பயன் பெறலாம்

எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு, இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், நிலத்தாவாக்கள், சாலை மற்றும் குடிநீர் வசதி குறித்து மனு அளித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story