குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகா‌‌ஷ் மீனா வேண்டுகோள்


குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகா‌‌ஷ் மீனா வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Dec 2019 10:00 PM GMT (Updated: 21 Dec 2019 7:36 PM GMT)

குற்றங்களை தடுக்க போலீசாருடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகா‌‌ஷ் மீனா வேண்டுகோள் விடுத்து பேசினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் மானூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ராமையன்பட்டி பஜார், அழகிய பாண்டியபுரம் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா தனியார் மைன்ஸ் நிறுவனம் சார்பில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ராமையன்பட்டியில் நேற்று மாலை நடந்தது.

நிகழ்ச்சிக்கு தாழையூத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு தலைமை தாங்கினார். மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகா‌‌ஷ் மீனா, கண்காணிப்பு கேமராவின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் போலீசார் பணியாற்றி வருகிறார்கள். இருந்தாலும் குற்றநடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிக்கார்டுகள் தேவைப்படுகிறது.

நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதால் குற்றங்கள் குறைந்துள்ளன. அதேபோல் வாகன விபத்துக்களும் பெருமளவு குறைந்துள்ளது.

குற்றங்களை தடுக்க போலீசாருடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். குற்றங்களை பற்றி ஏதாவது தெரிந்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story