பில்ராத் ஆஸ்பத்திரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 5 தளங்களுக்கு ‘சீல்’ வைக்க ஐகோர்ட்டு உத்தரவு மின்இணைப்பையும் துண்டிக்க நீதிபதிகள் ஆணை
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட சென்னை பில்ராத் ஆஸ்பத்திரியின் 5 தளங்களுக்கு ‘சீல்’ வைக்கவும், மின்இணைப்பை துண்டிக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், அரும்பாக்கத்தை சேர்ந்த பி.கிருஷ்ணன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை அமைந்தகரை செனாய் நகர், லட்சுமி டாக்கீஸ் சாலையில் பில்ராத் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த சாலை 30 அடி அகலம் கொண்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான சாலையாகும்.
தரைத்தளம் உள்பட 3 தளங்களுக்கு மட்டுமே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) பில்ராத் ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுமதி பெற்றுள்ளது. ஆனால் 4 முதல் 8 வரை கூடுதலாக 5 தளங்களை சட்டவிரோதமாக கட்டியுள்ளது.
அதாவது, 2902.8 சதுர மீட்டருக்கு கட்டிடம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு, சுமார் 1.8 லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு கட்டிடம் கட்டியுள்ளனர். வாகன நிறுத்தத்துக்காக கட்டப்பட்ட தரைத்தளத்தில் கீமோதெரபி, கதிரியக்கவியல் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை வழங்கும் அறைகள் உள்ளன.
ஆஸ்பத்திரியில் தீ விபத்து உள்ளிட்ட இயற்கை பேரிடர் சம்பவம் நடந்தால், நோயாளிகள் தப்பிச்செல்ல முறையான பாதைகள் இல்லை. சாய்வுத்தள பாதையும் இல்லை. நோயாளிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து அரசுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே, அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிட பகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் ஒருவரை நியமிக்க வேண்டும். சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பகுதியை இடித்து தள்ள சி.எம்.டி.ஏ. மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். அப்பகுதிக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், பில்ராத் ஆஸ்பத்திரி கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் டி.மோகன் என்பவரை நியமித்து உத்தரவிட்டனர்.
மேலும், ‘அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலன் கருதி, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 4-வது தளம் மற்றும் அதற்கு மேலுள்ள தளங்களுக்கு வழங்கப்பட்ட மின்இணைப்பை வருகிற 31-ந்தேதிக்குள் துண்டிக்க வேண்டும்.
இந்த சட்டவிரோத தளங்களில் புதிதாக நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்க ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள இந்த 4-வது மற்றும் அதற்கு மேலுள்ள தளங்களுக்கும் (5 தளங்களுக்கும்) ‘சீல்’ வைக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story