வானவில் : வந்துவிட்டது ‘ஹீரோ எக்ஸ்பல்ஸ்’
ஹீரோ மோட்டார் நிறுவனம் இம்பல்ஸ் மோட்டார் சைக்கிளுக்குப் பதிலாக இரண்டு புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ‘எக்ஸ்பல்ஸ் 200டி’ மாடல்.
இந்த இரண்டு மாடல் மோட்டார் சைக்கிளுமே 199.6 சி.சி. திறன் கொண்டவை. ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டவை. இவை இரண்டிலும் கார்புரேட்டர் மாடலுக்குப் பதிலாக பியூயல் இன்ஜெக்ஷன் மாடலைக் கொண்டதாக என்ஜின் உள்ளது. ஏ.பி.எஸ்., எல்.இ.டி. விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவற்றைக் கொண்டது.
இதில் சாகசப் பயணத்துக்கான எக்ஸ்பல்ஸ் 200டி மாடலின் எக்ஸாஸ்ட் பைப் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் சக்கரங்கள் வயர் ஸ்போக்ஸ் மாடலாகும். முன் சக்கரம் 21 அங்குலம் கொண்டதாகவும், பின் சக்கரம் 18 அங்குலம் கொண்டதாகவும் உள்ளது. டெலஸ்கோப்பிக் போர்க் முன்புறத்திலும் மோனோ ஷாக் அப்சார்பர் நடுப்பகுதியிலும் உள்ளது. வழக்கமான மோட்டார் சைக்கிளை விட இதன் உயரம் அதிகம்.எக்ஸ்பல்ஸ் 200 மாடலைக் காட்டிலும் 30 மி.மீ. உயரம் குறைவு. இதில் 17 அங்குல அலாய் சக்கரம் எம்.ஆர்.எப். நைலோகிரிப் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இம்பல்ஸ் மாடல் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் இதன் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாயிற்று. ஆனால் தற்போது அறிமுகமாக உள்ள இரண்டு மாடல்களுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவில் இது எடை குறைந்த வாகனமாக இருக்கும்.
ஏற்கனவே சாகச மோட்டார் சைக்கிள் பிரிவில் ராயல் என்பீல்டு இமாலயன், பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஜி.எஸ். ஆகியன உள்ளன. எடை குறைவு, சிறப்பான பிக் ஆகியன இதற்கு பெருமளவு வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடல் தயாரான அதே பிளாட்பார்மில் இது தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் வடிவமைப்பு, செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இதுபோல மேலும் பல மாடலை இதே பிளாட்பார்மில் உருவாக்கவும் ஹீரோ திட்டமிட்டு உள்ளது.
Related Tags :
Next Story