திராவிடர் கழக அடுத்த தலைவர் கலி.பூங்குன்றன் கி.வீரமணி அறிவிப்பு


திராவிடர் கழக அடுத்த தலைவர் கலி.பூங்குன்றன் கி.வீரமணி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2019 4:15 AM IST (Updated: 24 Feb 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவர் கலி.பூங்குன்றன் என்று கி.வீரமணி அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

ஜனநாயகம் இந்த நாட்டில் தொடர வேண்டுமா? அல்லது பாசிசம் நிலைக்க வேண்டுமா? இந்த நாட்டில் மக்கள் ஆட்சி தேவையா? அல்லது பாசிச காவி ஆட்சி தேவையா? என்று சொல்லக்கூடிய வகையில் மத்தியில் ஒரு காவி ஆட்சி, மாநிலத்தில் ஒரு அடிமை ஆட்சி உள்ளது.

இந்த 2 ஆட்சியையும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இன்னும் சில மாதங்கள் தான். இந்தியாவே ஒரு மாறுதல் அடையக்கூடிய, ஜனநாயகத்துக்கு ஒரு புது உருவம், புது வடிவம் வர உள்ளது. இதற்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

வெற்றிகரமான கூட்டணி

இந்த நேரத்தில் திராவிடர் இயக்கத்தின் அடித்தளமாக விளங்கக்கூடிய சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதற்கான அரசியல் சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சமூக நீதியை அழிக்கக்கூடிய வகையில் அந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பசுவுக்கு இருக்கிற பாதுகாப்பு நாட்டில் உழைக்கும், ஒடுக்கப்பட்ட, பெண்களுக்கு, அறிவார்ந்த மக்களுக்கு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “எனக்கு பின்னால் திராவிடர் கழகத்தின் தலைவராக, தற்போது துணைத்தலைவராக இருக்கும் கலி.பூங்குன்றன் இருப்பார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் கட்சிகள் ரூ.6 ஆயிரம், ரூ.2 ஆயிரம் கொடுக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது.

பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி உள்ளார். 40-க்கு 40 என அ.தி.மு.க. கூறுகிறது. ஒரு தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் வாங்க முடியாது. தி.மு.க. கூட்டணி தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தேர்தலில் திராவிடர் கழகம் போட்டியிடாது. ஆனால் யார் வர வேண்டும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவோம்”என்றார்.

Next Story