திருப்பூர் எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கல்லூரியில் 977 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 6 பேருக்கு தங்கப்பதக்கம்
திருப்பூர் எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 977 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 6 மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 31-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் பொன்முத்துராமலிங்கம் வரவேற்று பேசினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல்துறை தலைவர் குருமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கல்லூரியில் படித்த 16 துறைகளை சேர்ந்த இளங்கலை மாணவிகள் 782 பேருக்கும், முதுகலை மாணவிகள் 195 பேருக்கும் என்று மொத்தம் 977 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறைதலைவர்கள் மாணவிகளின் பெயரை படிக்க அவர்கள் வரிசையாக வந்து பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற இளங்கலை மாணவிகள் 3 பேருக்கும், முதுகலை மாணவிகள் 3 பேருக்கும் என்று மொத்தம் 6 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் முதல் 10 இடங்களை பெற்ற இளங்கலை மாணவிகள் 24 பேருக்கும், முதல் 5 இடங்களை பெற்ற முதுகலை மாணவிகள் 6 பேருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் பல்கலைக்கழக அளவில் இளங்கலை மாணவிகள் 27 பேரும், முதுகலை மாணவிகள் 9 பேரும் என்று மொத்தம் 36 பேர் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். இந்த விழாவில் மாணவ-மாணவிகள் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story