தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் சாலைமறியல்: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 2,401 பேர் கைது
தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 2,401 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ– ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2–வது நாளாக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
1–4–2003–க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிட வேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 66 அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 6 ஆயிரத்து 685 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. இது 61 சதவீதம் ஆகும். அரசு ஊழியர்கள் மொத்தம் 16 ஆயிரத்து 580 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 2,018 பேர் பணிக்கு வரவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 480 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 8 ஆயிரத்து 703 பேர் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இது 32 சதவீதம் ஆகும்.
வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்துக்கு தொடக்க நிலை ஆசிரியர் சங்க தொடர்பாளர் கோவிந்தராஜ், அரசு ஊழியர் சங்க தொடர்பாளர் பாஸ்கர், உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆசிரியர் சங்க தொடர்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 450 பெண்கள் உள்பட 550 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 401 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 1,467 பேர் பெண்கள் ஆவர்.
மறியல் போராட்டத்தையொட்டி தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், சுப்பிரமணியன், பெரியசாமி, பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Related Tags :
Next Story