ஸ்நாப் பவர் கைட் லைட்
வீடுகளில் இரவில் போதிய வெளிச்சம் இல்லாத சூழலில் தூக்கக் கலக்கத்தில் நடக்கும்போது கீழே விழுந்து அடிபடுவது சகஜம். அதிலும் குறிப்பாக குழந்தைகள், முதியவர்களுக்கு அதிகம் அடிபட வாய்ப்புள்ளது. பயம் காரணமாக குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு ஓடும்போது இருட்டில் கால் இடறி விழும் அபாயம் அதிகம். இந்த சூழலை போக்குவதற்கு வந்துள்ளதுதான் ஸ்நாப் பவர் கைட் லைட்.
இதை எளிதில் நிறுவலாம். பேட்டரி தேவையில்லை. வயர் இணைப்பும் கிடையாது. ஏற்கனவே உள்ள வயர் ஸ்விட்ச் போர்டு மீது இதை நிறுவினால் போதும். அறையில் இருட்டு சூழும்போது இதில் உள்ள சென்சார் செயல்பட்டு கீழ்ப்பகுதியில் வெளிச்சம் பரவச் செய்யும். மாடிப்படி கீழ் பகுதி, வராண்டா போன்ற பகுதிகளில் இதை நிறுவலாம்.
6 பேக் கொண்ட ஸ்நாப் பவர் கைட் லைட் விலை 79 டாலர். அமேசான் இறக்குமதி செய்து விநியோகிக்கிறது. இரவு முழுவதும் எரிந்தாலும் இது அதிக மின்சாரத்தை நுகராது. இதனால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தினாலும் குறைவான மின்சாரமே செலவாகும். குழந்தைகள், முதியவர்களின் பாதுகாப்பை கருதி அனைத்து வீடுகளிலும் இதைப் பயன்படுத்தலாம்.
Related Tags :
Next Story