கடந்த ஆண்டில் மட்டும் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்ததாக 18 ஆயிரம் வழக்குகள் பதிவு


கடந்த ஆண்டில் மட்டும் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்ததாக 18 ஆயிரம் வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 16 March 2018 4:10 AM IST (Updated: 16 March 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டில் மட்டும் மும்பையில் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்ததாக 18 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ரெயில்வே போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

மும்பை,

கடந்த ஆண்டில் மட்டும் மும்பையில் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்ததாக 18 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ரெயில்வே போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

செல்போன் பறிப்பு


மும்பையில் ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாசலில் நின்று செல்லும் பயணிகளிடம் செல்போன்கள் அதிகளவு பறிக்கப்படுகின்றன. தண்டவாளம் ஓரம் நின்று கொண்டு பயணிகளை தாக்கி செல்போனை பறிக்கும் கும்பலால் பலர் ரெயிலில் இருந்து கீழே விழுந்து உயிரையும் இழந்துள்ளனர்.

இதை தடுக்க ரெயில்வே போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த பிறகும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

18 ஆயிரம் வழக்குகள்

கடந்த ஆண்டு மட்டும் மும்பையில் ரெயில் பயணிகளிடம் இருந்து செல்போன்கள் பறிக்கப்பட்டதாக சுமார் 18 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செல்போன்களை பறிகொடுத்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புகார் அளிப்பது இல்லை. எனவே மும்பையில் தினமும் சுமார் 100 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடக்கிறது என கூறப்படுகிறது. இது குறித்து மேற்கு ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது:-

முதலில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்வது தவிர்க்கப்பட்டு வந்தது. தற்போது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் இது தொடர்பாக சுமார் 18 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூன் மாதம் மும்பை நகர்புற பகுதி ரெயில்நிலையங்களில் மட்டும் செல்போன் பறிப்பு தொடர்பாக 1,187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பெரும்பாலும் செல்போன் பறிப்பில் 16 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட வாலிபர்களே ஈடுபடுகின்றனர். செல்போன் பறிப்பு திருடர்களை பிடிக்க தண்டவாளப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகரித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story