அய்யா வைகுண்டர் அவதார தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி


அய்யா வைகுண்டர் அவதார தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 5 March 2018 4:00 AM IST (Updated: 5 March 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.

தூத்துக்குடி,

இந்தியா முழுவதும் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு பாடத்திட்டங்களில் இடம் பெற வேண்டும். திருவனந்தபுரம்- கன்னியாகுமரி சாலைக்கு அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட வேண்டும். அய்யா வைகுண்டரின் அவதார தினவிழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்து மக்கள் கட்சி துணை நிற்கும். இந்த பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தோடு பா.ஜனதா கட்சி அணுகினால் பா.ஜனதா கட்சியின் அணுகுமுறையை இந்து மக்கள் கட்சி எதிர்க்கும். மேலாண்மை வாரியம் என்பது நிரந்தர தீர்வு. இதில் அரசியலுக்கோ, மாநில பிரிவினைகளுக்கோ இடம் இல்லை.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையை மையமாக வைத்து நக்சலைட்டுகள் ஊடுருவும் முயற்சி நடந்து வருகிறது. கதிராமங்கலம், நெடுவாசல், கூடங்குளம் போராட்டம் போன்று, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியை போராட்ட களமாக மாற்றுவதற்கு நக்சலைட்டுகள் முயற்சி செய்து வருகின்றனர். இதனை போலீசார் கண்காணித்து அமைதியை குலைக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story