காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க முயற்சி? தனியார் நிறுவன அதிகாரிகளை விரட்டிய விவசாயிகள்
காவிரிடெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க முயற்சிப்பதாக கூறி, தனியார் நிறுவன அதிகாரிகளை விரட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டத்தில் காவிரியின் டெல்டா பகுதியாக காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம் பகுதிகள் இருந்து வருகிறது. இங்கு எம்.இ.சி.எல். என்கிற தனியார் நிறுவனம் கடந்த சில நாட்களாக விவசாய விளைநில பகுதியில் கனரக எந்திரம் மூலம் ஆழ்துளை குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு குமராட்சி அடுத்த நெய்வாசல் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் ஆழ்துளை குழாய் அமைக்கும் பணியில் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.
மீத்தேன் வாயு எடுப்பதற்காக தான் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெறுவதாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மத்தியில் தகவல் பரவியது. இதையடுத்து, விவசாயிகள் ஒன்று திரண்டு சென்று ஆழ்துளை குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர், பின்னர் அந்த பணிகளில் ஈடுபட்டவர்களை அவர்கள் அங்கிருந்து விரட்டினர்.
இந்த நிலையில், நேற்று எம்.இ.சி.எல். நிறுவனத்தை சேர்ந்தவர்கள் காட்டுமன்னார் கோவில் அருகே சாட்டை மேடு கிராமத்துக்கு சென்று, அங்குள்ள வயல்வெளி பகுதியில் ஆழ்துளை குழாயை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் என்று ஏராளமானவர்கள் அங்கு திரண்டு சென்று, குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர். அப்போது அந்த நிறுவனத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பி, எம்.இ.சி.எல். நிறுவனத்தை சேர்ந்த மேற்பார்வையாளர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள் என்று அனைவரையும் அங்கிருந்து விரட்டினர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், காவிரி டெல்டா பகுதியில் உள்ள கிராமங்களில் பெட்ரோலியம், மீத்தேன் வாயு எடுக்கும் வகையில் இவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே கதிராமங்கலம் கிராமத்தில் இந்த திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். இந்த நிலையில், இவர்கள் தற்போது காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு வந்து இருப்பதாக தெரிகிறது.
எதற்காக குழாய் அமைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அந்நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டால் அவர்கள் இந்தி மொழியில் பேசுகிறார்கள். இதனால் அவர்களிடம் இருந்து எங்களுக்கு தெளிவான பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மீத்தேன் வாயு எடுக்க அனுமதித்தால் இந்த பகுதியில் விவசாயம் அடியோடு பாதித்துவிடும். ஆகையால் தான் இவர்களை எங்கள் பகுதியில் இருந்து விரட்டி வருகிறோம்.
இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் தொடர்ந்து ஆழ்துளை குழாய் அமைக்க முற்படுவதற்கான காரணம் என்ன என்பதை மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்திட வேண்டும், இல்லையெனில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து 2-வது முறையாக இந்நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகளின் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Tags :
Next Story