‘புனே வன்முறைக்கு பின்னால் சதி இருக்கிறது’ தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
புனே மாவட்டம் பீமா- கோரேகாவ் வன்முறை சம்பவத்துக்கு பின்னால் சதி இருப்பதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
மும்பை,

பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம்
மும்பையில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே கலந்து கொண்டார். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், புனே மாவட்டம் பீமா- கோரேகாவ் வன்முறைக்கு சம்பவத்துக்கு பின்னால், மிகப்பெரிய சதி இருப்பதாக குற்றம்சாட்டினார்.
எனவே, பா.ஜனதா தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், சமூகத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட தொண்டர்கள் முற்பட வேண்டும் என்றும், இதற்காக பொதுமக்களுடன் நிலையான தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், வர இருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு நிர்வாகிகளிடம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.
ராவ்சாகேப் தன்வே
பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே பேசும்போது, “நமது வளர்ச்சி திட்டங்களை பொறுக்க முடியாமல், சிலர் பா.ஜனதாவையும், மாநில அரசையும் கெடுக்க பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் வெற்று முழக்கம் பொதுமக்களிடம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல், தோல்வி அடைந்துவிட்டது” என்றார்.
அத்துடன், வருகிற 26-ந் தேதி ‘அரசியல் அமைப்பை காப்போம்’ என்று எதிர்க்கட்சிகள் நடத்த இருக்கும் பேரணிக்கு பதிலடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூவர்ண கொடி ஏற்றி, எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் கூறினார்.
புனே மாவட்டம் பீமா- கோரேகாவ் போர் நினைவுச்சின்னம் அருகே கடந்த 1-ந் தேதி இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒட்டுமொத்த மராட்டியமே இரண்டு நாட்கள் ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story