ஊதியம் வழங்கக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை
ஊதியம் வழங்கக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. நிதிநெருக்கடி ஏற்பட்டதால் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தி வருகிறது. மேலும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் முதற்கட்டமாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு துறைகளில் பணி நிரவல் செய்யப்பட்டனர். இருப்பினும் நிதிநெருக்கடி சீராகவில்லை.
இதன் காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்கவில்லை.
இந்த நிலையில் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியம் நேற்று வரை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கவில்லை. இதனால் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு துணைவேந்தர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பல் கலைக்கழகத்தில் ஆசிரியர் ஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதனை தொடர்ந்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரசேகர் நேரில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊழியர்கள் கூறுகையில், மாத கடைசி தேதியிலேயே ஊதியம் வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்குவதில்லை என்றனர். அதற்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரசேகர், 5-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) ஊதியம் வழங்கப்படும் என்றார். அதற்கு ஊழியர்கள், 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story