சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
காளிப்பாளையத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
உப்பிடமங்கலம்,
கரூரில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று புலியூர் அருகே உள்ள காளிப்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாமணிவண் ணன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
மரக்கன்றுகள் நடப்பட்டன
கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொண்ட கால் நடைகளுக்கு தாது உப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
முன்னதாக புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நளினி, திட்ட அலுவலர் கவிதா, தாந்தோனி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஆலம்தங்கராஜ், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பொரணி கணேசன், தாசில்தார் சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து புலியூர் அருகே உள்ள ஒரு தனியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிர மணியன் தொடங்கி வைத்தார்.
அறுவை சிகிச்சை
இதையடுத்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதியோர் உதவி தொகை பெறும் 50 முதியோர்களுக்கு கண்ணொளி வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதேபோல் கரூர் நகராட்சி ராயனூர் பகுதியில் உள்ள வார்டு எண்-39 மற்றும் 40-ஐ சேர்ந்த பொதுமக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.

Related Tags :
Next Story