ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அமைக்க கோட்ட மேலாளரிடம் சந்திரபிரபா எம்.எல்.ஏ. மனு


ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அமைக்க கோட்ட மேலாளரிடம் சந்திரபிரபா எம்.எல்.ஏ. மனு
x
தினத்தந்தி 10 Sept 2017 4:30 AM IST (Updated: 10 Sept 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை தளங்களை உயர்த்த வேண்டும் என்றும் 2–வது நடைமேடைக்கு செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் கோட்ட ரெயில்வேமேலாளரிடம் சந்திரபிரபா எம்.எல்.ஏ. மனுகொடுத்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சந்திரபிரபா எம்.எல்.ஏ. மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேராவை சந்தித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் அடைப்படை வசதிகள் செய்து தர மனு கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:–

ரெயில் நிலையத்தின் 1, 2– வது நடைமேடை தளங்களை உயர்த்துவதோடு 2–வது நடைமேடைக்கு செல்ல மேம்பாலம் அமைத்திட வேண்டும். இரவு நேரங்களில் பயணிகளின் பயன்பாட்டுக்கு சோடியம் விளக்கு வசதி செய்து தர வேண்டியதும் அவசியமாகும்.

பயணச்சீட்டு முன்பதிவு நேரத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை முறைப்படுத்திட வேண்டும். சுகாராதரா வளாகம் அமைப்பதோடு பயணிகள் நிழற்குடை மற்றும் போதுமான இருக்கை வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து சந்திரபிரபா எம்.எல்.ஏ. கூறுகையில், மனுவை பெற்றுக்கொண்ட மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக தெரிவித்தார். மேலும் செங்கோட்டையில் இருந்து புனலூர் வரையிலான அகல ரெயில் பாதை பணி விரிவில் நிறைவடைய இருப்பதால் இந்த மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அதற்கு முன்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தினேன் என்றும் குறிப்பிட்டார்.


Next Story