சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சாவு: அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு


சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சாவு: அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 24 Aug 2017 11:45 PM (Updated: 24 Aug 2017 11:15 PM)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கிய தையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ஆம்பூர் அரசு மருத்துவ மனையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்,

மின்சாரம் தாக்கிய தையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ஆம்பூர் அரசு மருத்துவ மனையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கண்ணாடியும் உடைக்கப் பட்டது.

ஆம்பூர் பி.கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் தியாகராஜன் (வயது 27), தையல் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் முத்தாலம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது. பொதுமக்கள் தேரை பிடித்து இழுத்து சென்றனர். அதில் தியாகராஜனும் தேரை இழுத்து சென்றார்.

அப்பகுதியில் ஒரு தெருவில் சென்றபோது மழை பெய்தது. மழையின் காரணமாக தியாக ராஜன் டிரான்ஸ்பார்மர் உள்ள பகுதியில் ஒதுங்கி நின்று தேரை இழுத்தார். அப்போது திடீரென தியாகராஜன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தியாகராஜன் தூக்கி வீசப் பட்டார். அவரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு நள்ளிரவு 12 மணிக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்க பணியில் இருந்த டாக்டர் வரவில்லை. மேலும் சிகிச்சைக்கு தகுந்த உபகரணங்கள் இல்லை. இதனால் பொதுமக்கள் மருத்துவ மனையை முற்றுகை யிட்டனர். மேலும் மருத்துவ மனை நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப் பினர். இதனி டையே தியாகராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனால் பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர் களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். மேலும் மருத்துவ மனையின் கண்ணாடியையும் உடைத்தனர். பின்னர் உறவினர்கள் இறந்த தியாக ராஜனின் உடலை வீட்டிற்கு தூக்கி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து போ ராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி அனுப் பினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனின் வீட்டுக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 13-ந் தேதி மருத்துவ மனையில் பணி நேரத்தில் டாக்டர் இல்லாததால் சிகிச்சை பெற வந்த ராஜ்குமார், வைஷ்ணவி ஆகியோர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story