இரு அணிகள் இணைந்ததையொட்டி அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


இரு அணிகள் இணைந்ததையொட்டி அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 4:00 AM IST (Updated: 22 Aug 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

இரு அணிகள் இணைந்ததையொட்டி அ.தி.மு.க. வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மன்னார்குடி,

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்ததையொட்டி மன்னார்குடி பஸ் நிலையம் அருகே நேற்று அ.தி.மு.க. வினர் நகர செயலாளர் மாதவன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம்,கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்கண்ணன்,முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க வினர் கலந்துகொண்டனர்.

இதே போல அ.தி.மு.க. இரு அணிகள் இணைந்த செய்திகேட்டு குடவாசல் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், நகர செயலாளர் சுவாமிநாதன் முன்னிலையில் அ.தி.மு.க. வினர் குடவாசல் ஒன்றிய நகர பகுதிகளில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதேபோல இரவாஞ்சேரி கடைவீதியில் குடவாசல் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பிலும் பெரியார் சிலை முன்பு அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story