ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து நாராயணசாமி மரியாதை


ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து நாராயணசாமி மரியாதை
x
தினத்தந்தி 19 Aug 2017 9:52 PM GMT (Updated: 19 Aug 2017 9:52 PM GMT)

த.மா.கா. நிறுவனர் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் த.மா.கா. நிறுவனர் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மரப்பாலம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story