திசையன்விளை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து நேற்று இடையன்குடியில் பள்ளி மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திசையன்விளை,
திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து நேற்று இடையன்குடியில் பள்ளி மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மதுவுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சேகர குரு சந்திரகுமார் தலைமை தாங்கினார். ராஜகுமார், டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் வரவேற்றார். தேசிய மது ஒழிப்பு மற்றும் மது போதைக்கு எதிரான மக்கள் இயக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி முத்துக்குமார், காங்கிரஸ் பட்டதாரி அணி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், காங்கிரஸ் மாநில வழக்கறிஞர் அணி துணை தலைவர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story