மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு இறுதி சடங்கு செய்த பொதுமக்கள்

காரிமங்கலம்,
காரிமங்கலம் போலீஸ் நிலையம் பின்புறம் அண்ணா நகர் உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை இந்த பகுதியில் உள்ள தெருவிளக்கு கம்பங்களில் குரங்குகள் தாவி குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு குட்டி குரங்கு எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அந்த குரங்கு குட்டியை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொதுமக்கள் இறந்த குரங்கு குட்டிக்கு இறுதி சடங்கு செய்து வண்ணான் ஏரிக்கு எடுத்து சென்று புதைத்தனர். குட்டியை இழந்த தாய் குரங்கு நெடுநேரம் அந்த பகுதியிலேயே சுற்றி வந்தது. இந்த சம்பவம் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Tags :
Next Story