மின்னல் தாக்கியதில் சுவர் இடிந்து 5 பேர் பலியான அரிசி ஆலையில் தடயவியல் துறையினர் ஆய்வு
செங்கம் அருகே அரிசி ஆலையில் இடி, மின்னல் தாக்கி சுவர் இடிந்ததால் 5 பேர் பலியான இடத்தை தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். பலியானவர்கள் குடும்பத்திற்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேரில் ஆறுதல் கூறினார்.
செங்கம்,
செங்கம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. செங்கம் அருகே தளவநாயக்கன்பேட்டையில் நவ்ஷாத் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையின் கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. மழையை தொடர்ந்து அந்த பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் அங்குள்ள கட்டிடத்திற்குள் ஒதுங்கினர்.
அப்போது இடி, மின்னல் தாக்கியதில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் செங்கத்தை அடுத்த சொர்பனந்தலை சேர்ந்த குப்புசாமி மனைவி ஆண்டாள் (வயது 55), கோபி மனைவி ஆரவள்ளி (40), விஜயன் மனைவி குமுதா (31), முனியன் மனைவி செல்வி (40), கட்டையன் மனைவி ரேணு (50) ஆகிய 5 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த செங்கம் தோக்கவாடியை சேர்ந்த கோபி மனைவி குப்பம்மாள் (55), அருளானந்தம் மனைவி இதயமேரி (50) ஆகியோர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அமைச்சர் ஆறுதல்
இந்த நிலையில் நேற்று காலை அரிசி ஆலை கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை வேலூர் தடயவியல் துறையினர் வந்து ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வி.பன்னீர்செல்வம், மு.பெ.கிரி, உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் விபத்தில் பலியான குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் ஆறுதல் கூறினார்.
முன்னதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 பெண்களையும் நேரில் பார்த்து ஆறுதல் கூறினர்.

Related Tags :
Next Story