வடு இல்லாமல் காயத்தை குணப்படுத்தும் ‘பசை’


வடு இல்லாமல் காயத்தை குணப்படுத்தும் ‘பசை’
x
தினத்தந்தி 27 May 2017 2:24 PM IST (Updated: 27 May 2017 2:24 PM IST)
t-max-icont-min-icon

உடலின் எந்தப் பாகத்தில் காயங்கள் ஏற்பட்டு மறைந்தாலும் அவற்றின் வடுக்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கும் அல்லது நிரந்தரமாகவே ஆகிவிடும்.

டலின் எந்தப் பாகத்தில் காயங்கள் ஏற்பட்டு மறைந்தாலும் அவற்றின் வடுக்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கும் அல்லது நிரந்தரமாகவே ஆகிவிடும்.

ஆனால் வடுக்கள் இல்லாமல் காயங்களை விரைவில் குணப்படுத்தக்கூடிய பசை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு முன்னர் டாக்டர்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தியபோதிலும் வடுக்களை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு புதிய ஆய்வில் இந்தப் பசை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆழமாக வெட்டுப்பட்ட காயங்கள் என்றாலும், ‘கொலாஜின்’ நார்களைக் கொண்டு வடுக்களை முற்றாக நீக்கும் சக்தி இந்தப் பசைக்கு உள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுதான் இதைக் கண்டுபிடித்துள்ளது. எலிகளில் 8 மில்லிமீட்டர் ஆழத்துக்கு காயங்களை ஏற்படுத்தி, குறிப்பிட்ட பசையின் செயல்திறன் பரிசீலிக்கப்பட்டது. அப்போது 11 நாட்களில் 99 சதவீத காயமும் வடுக்களும் மறைந்திருந்தன.

தொடர்ந்து 28 நாட்களில் எந்த ஓர் அடையாளமும் இன்றி காயங்கள் முழுமையாகக் குணப்படுத்தப்பட்டிருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாயாஜாலம் புரியும் இந்த அதிசயப் பசை விரைவில் மனிதப் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவோம்.


Next Story