இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்


இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2017 3:45 AM IST (Updated: 25 April 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில அமைப்பாளர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் அரசு, மாவட்ட துணைத்தலைவர்கள் சீனிவாசன், கோபாலகிருஷ்ணன், புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வெற்றிச்செல்வன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாத மாநில அரசை கண்டிப்பது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் நகர துணைத்தலைவர் வடிவழகன், பொதுச்செயலாளர்கள் கதிர்காமன், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மகளிரணி தலைவி புவனா நன்றி கூறினார். 

Next Story