கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் தேரோட்டம்


கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 8 April 2017 10:45 PM (Updated: 8 April 2017 8:28 PM)
t-max-icont-min-icon

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாகேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாகேஸ்வரர், பிரகன்நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதை தொடர்ந்து கடந்த 6-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

ஆதிகம்பட்ட விஸ்வநாதர்

இதேபோல் கும்பகோணம் ஆதிகம்பட்ட விஸ்வநாதா் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், மகாமக குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறு கிறது. 

Next Story