நன்மங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா


நன்மங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா
x
தினத்தந்தி 5 April 2017 1:45 AM IST (Updated: 5 April 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நன்மங்கலத்தில் உள்ள ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர மங்கள ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை நன்மங்கலத்தில் உள்ள ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர மங்கள ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று திருமஞ்சனமும், லட்சார்ச்சனை சங்கல்பமும் நடந்தது. அதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு சீதா கல்யாண வைபவம் நடத்தப்பட்டு, வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமபாத சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


Next Story