பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சியால் வறண்ட ஏரி, குளங்கள்
நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள், காட்டாமணக்கு செடிகள் ஆக்கிரமித்துள்ளதாலும், வரத்து வாய்க்கால்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத நிலையிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சியால் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் தாலுகாவில் 18 ஏரிகளும், குன்னம் தாலுகாவில் 27 ஏரிகளும், வேப்பந்தட்டை தாலுகாவில் 28 ஏரிகளும் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஏரிகள் தவிர 32 தடுப்பணைகளும் உள்ளன. தமிழகத்தில் மழை மறைவு பிரதேசமாக உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழை அளவு 908 மி.மீ. ஆகும். 2016-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் 512 மி.மீ. மழையே பெய்துள்ளது.
வேப்பந்தட்டையை அடுத்த அன்னமங்கலம் ஊராட்சி விஸ்வக்குடியில் பச்சைமலை- செம்மலை இடையே கல்லாற்றின் குறுக்கே கடந்த 2015-ம் ஆண்டில் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் விஸ்வக்குடி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. 30 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும். ஆனால் 2016-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் விஸ்வக்குடி நீர்த்தேக்கத்தில் துளிகூட நீர் இன்றி வெறும் கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. தற்போது ஆலத்தூர் தாலுகா கொட்டரை- ஆதனூர் இடையே சுமார் 465 ஏக்கர் பரப்பளவில் மருதையாற்றின் குறுக்கே ரூ.108 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
சீரமைக்கப்படவில்லை
பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரணாரை நீலியம்மன் ஏரி, பெரம்பலூர் பெரியஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, துறைமங்கலம் பெரியஏரி, ஆலந்துறை அம்மன் ஏரி ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மற்றும் அவற்றுக்கான நீர்வரத்து, நீர்வெளியேற்று வாய்க்கால்கள் ஆகியவை 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரி சீரமைக்கப்படாமலேயே உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர் ஏரி, வடக்கலூர் ஏரி, லாடபுரம், குரும்பலூர் ஏரிகள், வடக்கலூர், பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் மதுரகாளிஅம்மன் ஏரி மற்றும் பெரிய ஏரி, எசனை பெரியஏரி, மதவாணை அம்மன் ஏரி உள்ளிட்ட ஏரிகள் பிரதான ஏரிகள் ஆகும்.
ஆனால் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், மேலமாத்தூர் உள்பட ஓரிரு ஏரிகளில் சிறிதளவு மட்டுமே நீர் தேங்கி உள்ளன. இவற்றை தவிர அனைத்து ஏரிகள் மற்றும் குளங்கள், குட்டைகள் வறண்டு காட்சி அளிக்கின்றன. இதனால் நீர்நிலைகள் தற்போது விளையாட்டு மைதானமாக மாறியுள்ளன. பெரம்பலூர் பெரியஏரி, அரும்பாவூர் பெரியஏரி, பாடாலூர் ஏரி ஆகியவற்றில் அரிமா சங்கங்கள் மூலம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் அரசு சார்பில் மிக தாமதமாக குடிமராமத்து பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்
வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பே நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள், நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் உள்ளிட்டவற்றை முழுமையாக அகற்றியும், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்தும் இருந்தால் அவ்வப்போது பெய்துவரும் மழை நீரை ஓரளவு தேக்கி வைத்திருக்க முடியும். ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, மாவட்ட நீதிமன்றம் தலையிட்டபிறகே இப்பணிகள் மிக தாமதாக தொடங்கப்பட்டிருந்தாலும், பெயரளவிற்கே நடந்து வருகிறது. பெரம்பலூரின் பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் ஏறத்தாழ 200 அடிக்கு கீழே சென்றுவிட்டது. நகர்வாழ் குடியிருப்பு மக்கள் ஆழ்துளை கிணறுகளையே பிரதானமாக நம்பி வாழும் நிலையில், ஆழ்துளை கிணறுகள் பெரும்பாலானவை வறண்டுவிட்டன.
டோல்கேட் அருகே காவிரி கொள்ளிடத்தில் இருந்து பெரம்பலூர் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதிய மழையின்றி காவிரி வறண்டு விட்டதால் 10 நாட்களுக்கு ஒரு முறையே வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலேயே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரலாறு காணாத வறட்சியை பெரம்பலூர் நகரம், மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் மேற்கு எல்லையாக திகழும் பச்சைமலையில் இருந்து உற்பத்தியாகும் கல்லாறு, வெள்ளாறு நீரின்றி கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. 2015-ம் ஆண்டில் வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால் 2016-ல் கடும் வறட்சி காரணமாக சிறிதளவும் நீரின்றி வறண்டுபோய் உள்ளது. இதனால் வெள்ளாற்று நீர்த்தேக்கம் கடும் வறட்சியால் நீரின்றி வெறும் மணலாய் காட்சி அளிக்கிறது.
தடுப்பணைகள்
காட்டாறுகளின் குறுக்கே நீர் செறிவூட்டலுக்காக ஆங்காங்கே சிறிய தடுப்பணைகளை அதிக எண்ணிக்கையில் கட்டுவதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளாற்றின் மூலம் ஏறத்தாழ 5 டி.எம்.சி. தண்ணீர் வங்காள விரிகுடாவில் வீணாக கலப்பதை தடுக்க முடியும் என்று வெள்ளாற்று பாசன விவசாயிகள் தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்யும் மழைநீரை முறைப்படுத்தி ஏரிகள், குளங்கள், குட்டைகளுக்கான நீர்வரத்து வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்தும், நீர்நிலைகளில் பெரிதும் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள், நெய்வேலி காட்டாமணக்கு செடிகளை உடனே அகற்றியும், மதகுகளை மராமத்து செய்திடுமாறும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் ஒவ்வொரு மாதமும் நடந்துவரும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக உரிய காலங்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படாததால் இதுபோன்ற அவலநிலை ஏற்பட்டுள்ளதாக 3 தலைமுறைகள் கண்ட விவசாயியான ராஜா சிதம்பரம் தெரிவித்தார்.
தாமாக பெய்யும் சிறிதளவு மழையும் நீர்நிலைகளில் தேங்குவதற்கும், அதன்வாயிலாக நீர்மட்டம் உயர்வதற்கும் பெரிதும் துணைபுரியும் என்பதால், பிரதான ஏரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொதுப்பணித்துறையும், சிறிய ஏரிகளை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களும் சீரமைக்கவும், மாவட்ட கலெக்டரும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

Next Story