திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் மாவட்ட குற்றவியல் நீதிபதி பார்வையிட்டார்


திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் மாவட்ட குற்றவியல் நீதிபதி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 11 March 2017 4:00 AM IST (Updated: 10 March 2017 10:17 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு

திருவாரூர்,

தமிழகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் அரசுத்துறை வளாகங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை துறைத்தலைவர் அகற்றிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஐகோர்ட்டு உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதை மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் மேற்பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை உதவி நிலைய டாக்டர்கள் தினேஷ்கண்ணா, அருண்குமார் ஆகியோர் செய்து இருந்தனர். இந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதை ஐகோர்ட்டு உத்தரவின்படி திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி குமார், முன்சீப் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story