குன்னூர் ரெயில் நிலையத்தில் 2–வது நடைமேடையில் மேற்கூரை அமைக்கும் பணி
குன்னூர் ரெயில் நிலையத்தில் 2–வது நடைமேடையில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கோடை சீசனுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரெயில்களுக்கு குன்னூரில் இருந்துதான் என்ஜின்கள் மாற்றப்பட்டன. இதனால்தான் குன்னூர் ரெயில் நிலையம் ரெயில்வே சந்திப்பாக இருந்தது.
தற்போதும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலுக்கு குன்னூரில் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜின் மாற்றப்படுகிறது. அதேபோன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரெயிலுக்கு குன்னூரில் டீசல் என்ஜினுக்கு பதிலாக பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் பொருத்தப்படுகிறது.
2–வது நடைமேடைமுக்கியத்துவம் பெற்ற குன்னூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்க வசதியாக ஒரு நடைமேடை மட்டுமே இருந்தது. இரண்டு ரெயில்கள் குன்னூர் ரெயில் நிலையத்திற்கு வரும்போது இரண்டாவது ரெயில் பாதையில் ரெயில் நிற்கும் போது பயணிகள் இறங்க நடைமேடை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டனர்.
இதனை தொடர்ந்து குன்னூர் ரெயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது நடைமேடை அமைக்கப்பட்டது.
ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடுஇந்த நிலையில் இரண்டாவது நடைமேடையில் மேற்கூரை இல்லாத காரணத்தால் இரண்டாவது நடைமேடையில் இறங்கும் பயணிகள் மழை காலங்களில் மழையில் நனைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இரண்டாவது நடைமேடையில் மேற்கூரை அமைக்கவும், அந்த நடைமேடையை சீரமைக்கவும் தென்னக ரெயில்வேயின் சேலம் கோட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நடைமேடை சீரமைத்தல் மற்றும் கூரை அமைக்கும் பணி கோடை சீசனுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.