பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை நாளை நடக்கிறது


பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 6 March 2017 4:00 AM IST (Updated: 6 March 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை நாளை நடக்கிறது.

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவினையொட்டி குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் தினமும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு பத்திரப்பதிவுத்துறை பணியாளர்கள் சந்தன குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இன்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடைபெறுகிறது.

ஒடுக்கு பூஜை

திருவிழா இறுதி நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களப பவனியும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும், 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், குத்தியோட்டமும் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மகாபாரத தொடர் விளக்கவுரையும், 10 மணிக்கு சுழலும் சொல்லரங்கமும் நடைபெறும்.

மதியம் 1 மணிக்கு குமரி மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், ஹைந்தவ இந்து சேவா சங்க தலைவர் கந்தப்பன் தலைமை தாங்குகிறார்.

மாலை 6 மணிக்கு சமய மாநாடு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு இன்னிசை விருந்து, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. தீபாராதனை நடைபெற்று கொண்டிருக்கும் போது, மகாதேவரு அய்யர் கொடியை இறக்குகிறார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 

Next Story