கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ரூ.5.38 லட்சம் காணிக்கை வசூல்


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ரூ.5.38 லட்சம் காணிக்கை வசூல்
x
தினத்தந்தி 22 Feb 2017 4:15 AM IST (Updated: 22 Feb 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.5.38 லட்சம் காணிக்கை வசூலானது.

கன்னியாகுமரி,

பகவதி அம்மன் கோவில்

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி பகவதியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு செல்கிறார்கள். இவர்கள் தங்களின் நேர்ச்சையை கணிக்கையாக செலுத்துவதற்காக கோவிலில் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் மாதம் ஒருமுறை திறந்து காணிக்கை பணம் எண்ணப்படும்.

அதன்படி, இந்த உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இந்த பணி, குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பாரதி, நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் வெங்கடேசன், முதுநிலை கணக்கர் இங்கர்சால், பகவதியம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், தலைமை கணக்கர் ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

 குமரி மாவட்ட அனைத்து திருக்கோவில் பணியாளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள், கல்லூரி மாணவிகள் உள்பட பலர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.5.38 லட்சம்

இதில்  ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்து 681 காணிக்கை பணம் வசூலாகி இருந்தது. மேலும், 2 கிராம் 8 மில்லிகிராம் தங்கம், 12 கிராம் 400 மில்லி கிராம் வெள்ளி, மலேசியா நாட்டு நாணயங்கள் ஆகியவையும் உண்டியலில் கிடந்தன.  


Next Story