மட்டன் கொடுத்து ‘மட்டை’ ஆக்குகிறார்கள் தியாகராய நகர் எம்.எல்.ஏ. சத்யா பேட்டி
தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ. சத்யா என்கிற சத்ய நாராயணன், நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார்.
கூவத்தூர் சொகுசு விடுதியில் நேற்று காலை நீல நிற ‘டி-சர்ட்’, மற்றும் ‘பெர்முடாஸ்’ அணிந்தபடி, தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ. சத்யா என்கிற சத்ய நாராயணன், நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்கள் நின்று கொண்டிருந்த கதவு அருகே வந்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், ‘நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா? நல்லபடி கவனித்து கொள்கிறார்களா?’ என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சத்யா, ‘நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். அதிகாலையிலேயே மட்டன் (ஆட்டு இறைச்சி) கொடுக்கிறார்கள். ‘மட்டை’யும் ஆக்குகிறார்கள். வீட்டில் வழங்கப்படும் உணவை விட மிகச்சிறந்த உணவு வழங்கப்படுகிறது. இதுதவிர கோழிக்கறி, பழ வகைகள் அவ்வப்போது கிடைக்கிறது. நாங்கள் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறோம்‘ என்றார்.
பின்னர் அவரிடம் வெளி மாநில டெலிவிஷன் நிருபர்கள் பேட்டி வேண்டும் என்று கேட்டனர். அவரும் அதற்கு சம்மதித்தார். ஆனால், நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த ஒருவர் அவரை வெளியே செல்ல அனுமதி மறுத்தார். ஆனால் அதனை மீறி வெளியே வந்து பேட்டி அளித்தார். பின்னர், மீண்டும் சொகுசு விடுதிக்குள் சென்றார்.

Next Story