பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்குள் 6 ஆயிரம் கழிவறைகள் கட்டும் பணி தொடக்கம்
இந்தியாவிலேயே முதல்முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்குள் 6 ஆயிரம் கழிவறைகள் கட்டும் பணி நேற்று தொடங்கியது.
பெரம்பலூர்,
6 ஆயிரம் கழிவறைகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் சார்பில் கிராமப்புற மக்களிடம் கழிவறைகளால் ஏற்படும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. தூய்மை பாரத இயக்கத்தின் தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டும் திட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கொண்டு போய் சேர்க்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஊராட்சிகளில் 48 மணி நேரத்துக்குள் 6 ஆயிரம் தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டும் பணி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டது.
இதற்காக சிமெண்டு செங்கல்கள், சிமெண்டு கலவை, கழிவுநீர் கோப்பை உள்ளிட்டவை பயனாளிகளின் வீடுகளுக்கு முன்பு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. கழிவறைகள் கட்டும் பணியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொத்தனார்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த பணிகளை கண்காணிக்க தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடக்கின்றன.
கலெக்டர் பார்வையிட்டார்
திருமாந்துறை பகுதியில் கழிவறை கட்டும் பணிகளை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பார்வையிட்டார். இந்த கழிவறைகள் கட்டும் பணியானது நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்குள் நிறைவு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு கழிவறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நிசாம்பாத்தில் 48 மணி நேரத்தில் 1,000 கழிவறைகள் கட்டப்பட்டன. அதன்பின்னர் இந்தியாவிலேயே முதல்முறையாக அதிகளவிலான எண்ணிக்கையில் தனிநபர் இல்ல கழிவறைகள் 48 மணி நேரத்துக்குள் கட்டப்படுவது பெரம்பலூர் மாவட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ரூ.7 கோடியே 20 லட்சம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடாலூர், தெரணி உள்ளிட்ட ஊராட்சி களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவறை கட்டும் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் பார்வையிட்டார். பின்னர் அவர் இந்த திட்டம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதல்முறையாக 6 ஆயிரம் தனிநபர் இல்ல கழிவறைகளை 48 மணி நேரத்துக்குள் கட்டும் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பணிகளின் ஒட்டுமொத்த மதிப்பீடு ரூ.7 கோடியே 20 லட்சம் ஆகும். இதற்கு 6 லட்சத்து 60 ஆயிரம் சிமெண்டு செங்கல்களும், 30 ஆயிரம் சிமெண்டு மூட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
சூழல் மேம்பாட்டு கழிவறைகள்
மேலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உதவியுடன் 100 சூழல் மேம்பாட்டு சுகாதார கழிவறைகள் கட்டும் பணிகளும் இதில் நடக்கிறது. இதில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.12 ஆயிரமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் ரூ.18 ஆயிரமும் வழங்கப்பட்டு பாடாலூர், எசனை உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடக்கின்றன. வருகிற மார்ச் மாதத்துக்குள் திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரோஸ்லின், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி, தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story