ஏரல் நகர பஞ்சாயத்து பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார், ஏரல் நகர பஞ்சாயத்து பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அகற்றிட உத்தரவிட்டிருந்தார்.
ஏரல்,
இதையடுத்து நெல்லை மண்டல உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர் அறிவுரைப்படி ஏரல் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பிரபா, ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகளை அழைத்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட கேட்டு கொண்டிருந்தார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் செல்வபிரசாத், ஏரல் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர், இளநிலை உதவியாளர்கள் பத்திரகாளி, பரமசிவன், சுகாதார மேற்பார்வையாளர்கள் அடைக்கலம், அழகு மற்றும் பணியாளர்கள், வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு வியாபாரிகளிடம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அகற்ற வேண்டும் என்று கூறினார்கள். அவ்வாறு அகற்றவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். இதையடுத்து பெரும்பாலான வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கடை முன் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அகற்றினர். மேலும் சில வியாபாரிகள் கடை முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story