பொன்னேரியில் டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு ரூ.3 லட்சம் கொள்ளை
பொன்னேரியில் டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின்
பொன்னேரி,
பொன்னேரியில் டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக துளசி ராமனும், விற்பனையாளராக விஜயன் (வயது 35) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் இரவு கடையில் விற்பனை முடிந்ததும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபாட்டில்கள் விற்பனையில் வசூலான ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் பணத்தை கடையில் உள்ள இரும்பு லாக்கரில் வைத்து பூட்டினர். பின்னர் கடையை பூட்டி விட்டு இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.
சுவரில் துளை போட்டு கொள்ளைஇந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் இருவரும் கடையை திறந்தனர். அப்போது கடைக்குள் இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டு, தலைகுப்புற கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையின் பின்புற சுவரில் துளை போடப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள், இரும்பு லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.