சுசீந்திரம் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: பக்தர்களுக்கு வழங்க 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது

சுசீந்திரம்,
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்திவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டுக்கான ஜெயந்திவிழா வருகிற 29–ந் தேதி நடக்கிறது.
29–ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், காலை 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,000 லிட்டர் பால் மற்றும் 16 வகை பொருட்கள் அடங்கிய சோடஷ அபிஷேகமும் நடக்கிறது. அபிஷேகம் முடிந்தவுடன் மதியம் 12 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது.
லட்டு தயாரிப்பு
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சம் லட்டு தயார் செய்யப்படுகிறது. இந்த லட்டு தயார் செய்யும் பணி நேற்று தொடங்கியது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி லட்டு தயாரிக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருக்கோயில் அலுவலக மேலாளர் வெங்கடேஷ், கோவில் கணக்கர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். லட்டு தயாரிக்கும் பணியில் சுமார் 75 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தட்டுவடை, முறுக்கு ஆகியவை தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்
சுசீந்திரம் கோவிலின் உள்ளே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது கோவில் அணுகுசாலை மற்றும் கோவில் அருகாமையில் மேலும் 8 கேமராக்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் மார்கழித் திருவிழாவையொட்டி அன்னதானம் நடைபெறும் கோவில் கலையரங்கத்தில் 4 கேமராக்களும், எஸ்.எம்.எஸ்.எம். பள்ளி வளாகத்தில் 4 கேமராக்களும்,தேரோடும் ரதவீதிகளில் 8 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்படவுள்ளதாக குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story