தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இளம் வீரர்களுடன் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் ?
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் தொடர் ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் மோதுகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் இந்தியாவில் ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 19 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்து அயர்லாந்து அணியுடன் ஜூன் 26 மற்றும் 28ம் தேதிகளில் 20 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.
இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்ப்பட்டு வருகிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நீண்ட சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விதமாக முன்னணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோருக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் குறுகிய வடிவிலான இந்த தொடர்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்களுடன் தென் ஆப்பிரிக்க தொடருக்கு லட்சுமண் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம். இந்த தகவலை பிசிசிஐ விரைவில் அதிகாரபூர்வகமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story