முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி- அவசரமாக தாயகம் திரும்பிய கேன் வில்லியம்சன்..!!
கேன் வில்லியம்சன் தற்போது சொந்த நாடான நியூசிலாந்திற்கு திரும்பி உள்ளார்.
மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் நீடிக்கிறது.
ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதம் இருக்கும் ஒரு போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
இத்தகைய முக்கியமான சூழ்நிலையில் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பயோ பபுளை விடுத்து தற்போது சொந்த நாடான நியூசிலாந்திற்கு அவசரமாக திரும்பி உள்ளார்.
வில்லியம்சன் - சாரா ரஹீம் தம்பதிக்கு விரைவில் 2வது குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் மனைவியின் பிரசவத்திற்காக வில்லியம்சன் தாயகம் திரும்பியுள்ளார்.
இந்த தகவலை ஐதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு வில்லியம்சன் - சாரா ரஹீம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில் தற்போது 2-வது குழந்தை பிறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story